இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெளுத்து வாங்கிய ஹென்ரிச் க்ளேசனுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுதென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை இழந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இத்தொடரின் முதல் ஒருநாள்போட்டியின்போதுதென்ஆப்பிரிக்காஅணியின்விக்கெட்கீப்பரானடி காக் காயம் காரணமாகதொடரிலிருந்து விலகினார்அவருக்கு பதிலாக முதன்முறையாக ஹென்ரிச் க்ளேசன் என்னும் இளம் வீரர் தென் ஆப்ரிக்கா அணியில் சேர்க்கப்பட்டார் ஹென்ரிச் க்ளேசனும் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வந்தார்.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஒரு கை பார்த்த அவர், 30 பந்தில் 69 ஓட்டங்கள் குவித்ததுடன் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்இந்நிலையில் இந்த தொடர்களில் அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் க்ளேசனுக்கு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் 2 போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் விக்கெட் கீப்பராக க்ளேசன் அறிமுகமாகிறார்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாரா அமிதாப் பச்சன் வைரலாகும் டுவீட்

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்