ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாரா அமிதாப் பச்சன் வைரலாகும் டுவீட்

தமிழ்தெலுங்குமலையாளம்இந்திசினிமாக்களில்கொடிகட்டிப்பறந்நடிகைஸ்ரீதேவிநேற்றுஇரவுமாரடைப்பால்மரணமடைந்தார்ஸ்ரீதேவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் என தேசிய தலைவர்களும் பல மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினி, கமல், விஜயகாந்த், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் திரையுலகமே ஸ்ரீதேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற நடிகைகளின் முன்னோடியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் ஆகிய மூன்று துறைகளிலும் கொடிகட்டி பறந்தார். நடிப்பில் உச்சத்தை தொட்ட நடிகை ஸ்ரீதேவி16 வயதினிலே, மூன்றாம் பிறை ஆகிய திரைப்படங்கள் தலைமுறை கடந்தும் ஸ்ரீதேவியின் நடிப்பு திறமையை பறைசாற்றும்.

இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்தடுவீட்வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது.

ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டுவிட்டர் பக்கத்தில், “ஏதோ தவறாக படுகிறது.. வித்தியாசமான உணர்வாகவும் பதற்றமாகவும் உள்ளது.. ஏன் என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சன் இப்படி டுவீட் செய்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவியின் மறைவுசெய்தி வெளியானது.

ஸ்ரீதேவியின் மறைவு என்றில்லாமல் ஆனால் ஏதோ ஒன்றுதவறாகநடக்கப்போகிறதுஎனஅமிதாப்பச்சனின்உள்ளுணர்வுகூறியிருக்கிறது அமிதாப் பச்சன் டுவீட் போட்டு சில நிமிடங்களில் ஸ்ரீதேவியின் மறைவு செய்தி வெளியானதால்பச்சனின் டுவீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்