விராட் கோலிக்கும் டோனிக்கும் ஓய்வு கொடுத்த இந்தியா கிரிக்கெட் வாரியம்

இலங்கையில் நடைபெறவுள்ளமுத்தொடர்போட்டிக்கு விராட்கோலிக்கும் டோனிக்கும் இந்தியாகிரிக்கெட்வாரியம்ஓய்வுகொடுத்துள்ளது இலங்கையின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தொடர்

போட்டியை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதுஎதிர்வரும்மார்ச் மாதம் 6 ஆம் திகதி இலங்கபங்களா தேஸ் மற்றும் இந்தியா அணிகள் பங்குபற்றும் முத்தொடர்; போட்டி நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் இந்தியா அணி தற்;போது தென்னாபிரிக்கா அணியுடன் இருபதுக்கு 20 தொடர் விளையாடி வருவதாலும், ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் போட்டி ஆரம்பமாகவுள்ளதாலும், இந்தியா கிரிக்கெட் வாரியம் முன்னணி வீரர்களுக்கு இலங்கை தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் விராட் கோலி மற்றம் டோனி அடங்கிய 5 பேருக்கு ஓய்வு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா அணி விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments